ஆப்நகரம்

Vijay: வாரிசுக்கும் அஜித் படங்களுக்கும் உள்ள ஒற்றுமை.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..?

விஜய்யின் 'வாரிசு' படத்தின் புதிய மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Samayam Tamil 22 Jun 2022, 6:46 pm
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளர்கள் விரும்பும் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய், இன்றைய தினம் தனது 48 வது பிறந்தநாள் தினத்தை கொண்டாட உள்ளார்.
Samayam Tamil Varisu
Varisu


நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் விஜய். இன்றைய தினம் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாரிசு' படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி 66' படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ராஷ்மிகா கதாநாயகி நடிக்கும் இந்தப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெய சுதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். இந்தபடம் குடும்ப பாணியில் உருவாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்திற்கு 'வாரிசு' என தலைப்பிட்டு மூன்று புதிய போஸ்டர்களை வெளியிட்டனர் படக்குழுவினர்.

இந்நிலையில் விஜய்யின் 'வாரிசு' டைட்டிலுக்கும் அஜித் படத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்து ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர். கடைசியாக வெளியான அஜித்தின் படங்கள் எல்லாம் 'வி' செண்டிமென்ட்லயே வெளியானது. வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம், வலிமை என அஜித்தின் கடைசி ஐந்து படங்களும் 'V' யிலே ஆரம்பம் ஆனது. இந்நிலையில் தற்போது விஜய்யின் படம் 'V' யில் துவங்கியுள்ளதை அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

எஸ்பிபி சரண் - சோனியா அகர்வால் திருமணமா.?: தீயாய் பரவும் புகைப்படம்.!

அஜித் செண்டிமென்டை விஜய்யும் பாலோ பண்ணுவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இதுவரை 'V' யில் ஆரம்பித்த விஜய்யின் வேலாயுதம், வில்லு, வேட்டைக்காரன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதான வரவேற்பை பெறவில்லை. அந்த வழக்கத்தை 'வாரிசு' படம் உடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். 'வாரிசு' படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்