ஆப்நகரம்

'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு திடீர் எதிர்ப்பு: புதிய சிக்கலில் ராஜமெளலி..!

ராஜமெளலியின் 'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #BoycottRRRinKarnataka என்ற ஹேஸ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.

Samayam Tamil 24 Mar 2022, 8:28 am
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆர் ஆர் ஆர்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப்படம் நாளை வெளியாகவுள்ளது.
Samayam Tamil RRR
RRR


ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள 'ஆர் ஆர் ஆர்' படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. 'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் பாடல் ஒன்றுக்காக ஐந்து மொழி பாடகர்கள் ஒன்றிணைந்தனர். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், ஹிந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச்சந்திராவும், கன்னடத்திலும் யசின் நசிரும் பாடியுள்ளனர். அதனை தொடர்ந்து அண்மையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் வெளியானது.

வசூலில் சறுக்கியதா அஜித்தின் 'வலிமை': உண்மையை போட்டுடைத்த போனி கபூர்..!
இந்நிலையில் கர்நாடகாவில் 'ஆர்.ஆர்.ஆர்' படம் கன்னட மொழியில் இல்லாமல் தெலுங்கு மொழியில் அதிக திரையரங்குகளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கர்நாடக ரசிகர்கள் ட்விட்டரில் #BoycottRRRinKarnataka என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதே போல் தமிழ் நாட்டிலும் அதிக திரையரங்குகளில் 'ஆர்.ஆர்.ஆர்' தெலுங்கில் வெளியாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 'பாகுபலியை' மிஞ்சும் வகையில் இந்தப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தியுள்ளார் ராஜமெளலி. இதனால் படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்