ஆப்நகரம்

மணிமேகலையை இப்படி ஒரு பிறந்தநாள் பரிசை கேட்க வச்சுடுச்சே இந்த கொரோனா

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை தன் பிறந்தநாள் பரிசாக கேட்ட விஷயம் ரசிகர்களை அவரை பார்த்து பரிதாபப்பட வைத்துள்ளது.

Samayam Tamil 7 May 2020, 11:38 am
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலை கிராமத்திற்கு சென்ற இடத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அங்கு சிக்கிக் கொண்டார். இருப்பினும் வீட்டில் இருக்கும் குட்டீஸுடன் சேர்ந்து விளையாடி ஜாலியாக பொழுதை கழிக்கிறார்.
Samayam Tamil manimegalai


இன்று பிறந்தநாள் கொண்டாடும் மணிமேகலைக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு நெட்டிசன், உங்களுக்கு என்ன பிறந்தநாள் பரிசு வேண்டும் என்று கேட்டதற்கு சென்னைக்கு வருவதற்கான பாஸ் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மணிமேகலை பாஸ் கேட்டதை பார்த்த ரசிகர்கள் பாவப்பட்டுள்ளனர். சிலரோ, அக்கா சென்னையில் நிலைமை மோசமாக உள்ளது. அதனால் தற்போதைக்கு இங்கு வர வேண்டாம். நீங்கள் இருக்கும் இடம் தான் பாதுகாப்பானது. அங்கேயே இருக்கவும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

தனது பிறந்தநாள் அன்று கேக் வெட்டிய மணிமேகலை அதை மாட்டுக்கு கொடுத்தபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்னக்கா, லைட்டா வெயிட் போட்டது மாதிரி தெரியுது. ஆனால் நல்லா இருக்கு என்று கூறியுள்ளனர்.
மணிமேகலைக்கு பல நடிகர்களின் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மணி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பர்த்டே பாய் அதர்வா பற்றி இந்த 5 விஷயம் உங்களுக்கு தெரியுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்