ஆப்நகரம்

Kamal Haasan:அதானே, கமலாவது திருந்துவதாவது: என்னமோ போங்க ஆண்டவரே

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட விழாவில் உலக நாயகன் கமல் ஹாசனை பார்த்த ரசிகர்களோ, ஆண்டவராவது திருந்துவதாவது, என்னமோ போங்க என தெரிவித்துள்ளனர்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 27 Nov 2022, 1:56 pm
கமல் ஹாசனாவது திருந்துவதாவது என்று கூறி ஆண்டவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்களின் கவலைக்கு முக்கிய காரணம் உள்ளது.
Samayam Tamil fans worry about kamal haasan
Kamal Haasan:அதானே, கமலாவது திருந்துவதாவது: என்னமோ போங்க ஆண்டவரே


கமல் ஹாசன்

தன் வழிகாட்டியான இயக்குநர் கே. விஸ்வநாத்தை பார்க்க ஹைதராபாத் சென்ற கமல் ஹாசன் சென்னைக்கு திரும்பியதும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் நவம்பர் 23ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். மறுநாளே டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று தான் வீடு திரும்பினார். வீடு திரும்பிய கையோடு விஜய் சேதுபதி பட விழாவில் கலந்து கொண்டார்.

டிஎஸ்பி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் கமல் ஹாசனை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். விக்ரம் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த விஜய் சேதுபதியை பற்றி பெருமையாக பேசினார் கமல். ஒவ்வொரு தலைமுறை நடிகர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்காக கமலுக்கு நன்றி தெரிவித்தார் விஜய் சேதுபதி.

ஓய்வு

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இருந்த கமல் ஹாசன் வீடு திரும்பியதும் ஓய்வு எடுக்காமல் இப்படியா பட விழாவில் கலந்து கொள்வது. இந்த கமல் திருந்தவே மாட்டார். உங்களுக்கு ஓய்வு தேவை ஆண்டவரே. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கமல் மருத்துவமனையில் அனுமதி என்கிற செய்தி அறிந்ததுமே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ்

கமல் மருத்துவமனையில் இருந்ததால் இந்த வாரம் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கக்கூடும் என்று தகவல் வெளியானது. சிம்பு ஓகே தான் ஆனாலும் வேண்டாம். இந்த வாரம் சிலரை எல்லாம் வெளுக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஆண்டவர் தான் சரி என்றார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் பிக் பாஸ் மேடையில் கமல் ஹாசனை பார்த்த பார்வையாளர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

Simbu: சிம்பு ஓகே தான், ஆனாலும் வேண்டாமே


ஆண்டவர்

பிக் பாஸ், டிஎஸ்பி நிகழ்ச்சிக்கு வந்தது எல்லாம் சரி. கொஞ்சம் ஓய்வும் தேவை ஆண்டவரே என சினிமா ரசிகர்களும், பிக் பாஸ் பார்வையாளர்களும் தெரிவித்துள்ளனர். அஜித் குமாரை வைத்து துணிவு படத்தை இயக்கியிருக்கும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கமல் ஹாசன். அந்த படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பார் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் ஹீரோ டம்மியாகிவிடுவார் என்பது எல்லாம் ஆண்டவரிடம் நடக்காது என்பது விக்ரம் படத்திலேயே தெரிந்துவிட்டது. அதனால் அவர் மீண்டும் ஆண்டவருக்கு வில்லன் ஆனாலும் கவலை இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்