ஆப்நகரம்

திருமண நாளுக்கு முன்பாக மீனா வாழ்வில் நடந்தேறியுள்ள சோகம்: கலங்கும் ரசிகர்கள்.!

நேற்றிரவு காலமான மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jun 2022, 7:30 pm
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை மீனா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Meena
Meena


நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார். இந்நிலையில் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய் வித்யாசாகருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அலர்ஜி சுவாசப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மீனாவின் கணவர் மறைவிற்கு ரஜினி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதிச் சடங்குகளை மீனாவும், அவரது மகள் நைனிகாவும் செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை மனம் கலங்க செய்துள்ளது.

வித்யாசாகருக்கும், மீனாவிற்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை 12 ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளனர். இவர்களின் திருமண நாளுக்கு இன்னும் 14 நாட்கள் உள்ள நிலையில், இப்படியொரு தாங்க முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது பலரையும் கலங்க வைத்துள்ளது.

ஆண்டவருக்காக உதயண்ணா செய்த காரியம்: முடிவுக்கு வரும் ‘இந்தியன் 2’ பஞ்சாயத்து.!

அடுத்த செய்தி

டிரெண்டிங்