ஆப்நகரம்

பெப்சி தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை இழுபறி!

பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே நிலவும் சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.

TNN 13 Aug 2017, 8:16 am
சென்னை: பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே நிலவும் சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.
Samayam Tamil fefsi employees tri discussion goes with struggle
பெப்சி தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை இழுபறி!


பெப்சி தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளாததால் பேச்சுவார்த்தையை மீண்டும் வருகிற 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே ஊதிய உயர்வு, பொது விதிகள் அமல்படுத்துவது தொடர்பான சிக்கலால் சமீபத்தில் திரைப்பட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினைக்கு சுமுக முடிவு காணும் விதமாக 3 நாட்கள் படப்பிடிப்புக்கு கிளம்பினர். இதனை அடுத்து தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 4-ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் சரியான முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 11-ம் தேதி (நேற்று) நடப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் வெளியூர் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளில் இருப்பதால் இந்தப் பேச்சுவார்த்தை வரும் 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: தொழிலாளர்கள் நல ஆணையம் தெரிவித்ததன் அடிப்படையில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நாங்கள் சென்றோம். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஊரில் இல்லாததால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 17-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் பெப்சி, தயாரிப் பாளர்கள் சங்கம் இடையே நிலவும் சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.

Fefsi employees tri discussion goes with struggle.

அடுத்த செய்தி

டிரெண்டிங்