ஆப்நகரம்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு சரியான போட்டியாளர் இவர் தான்!

வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார்.

Samayam Tamil 4 Jun 2019, 10:32 am
வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார்.
Samayam Tamil Isari


தமிழ் சினிமா நடிகர் சங்க தேர்தல் கடந்த முறை தமிழகமே பரபரப்பாகும் வகையில் நடைபெற்றது. சரத்குமார் அணிக்கு எதிராக கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வென்றனர்.

இந்நிலையில் வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார்.

விஷால் அணியில் நிறைய உட் குழப்பங்கள் நிலவுததாக தெரிகிறது. இந்த முறையும் அதே அணி தேர்தலில் அதே பதவிகளுக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார்கள். ஆனால் அவர்களின் அணியில் இருந்த உதயா, ஆர் கே சுரேஷ், ஐசரி வேலன் ஆகியோர் விஷால் அணியின் மீது பயங்கர அதிருப்தியில் உள்ளனர். தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படாததால் சங்க உறுப்பினர்கள் பலரும் அவர்களது மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விஷால் அணிக்கு எதிராக போட்டியிட வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளார் ஐசரி கணேஷ் தான் சரியானவர். தன்னுடன் இன்னும் சில சங்க உறுப்பினர்கள் ஐசரி கணேஷ் அவர்களுக்கு ஆதரவளிக்கவிருக்கிறோம். கடந்த நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷிற்கு முக்கிய பங்கு உள்ளது.

தற்போது அவரே விஷால் அணிக்கு எதிராக போட்டியிடுகிறார். அவரே பதவிக்கு வந்தால் தான் சங்கத்தில் நிலவும் பிரச்சனைகள் தீரும். சங்க உறுப்பினர்களின் நலனிற்காகவும் உழைப்பார் என்று நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கேசுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஐசரி கணேஷ் கடந்த முறை விஷால் அணிக்கு மிகவும் பக்கபலமாக செயல்பட்டவர். நடிகர் சங்க கட்டிடத்தையும் இவரது நிறுவனம் தான் கட்டி வருகிறது. மேலும் ஆர் கே சுரேஷ் சமீபத்தில் நடந்த இசை விழாவில் விஷாலை கடுமையாக தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலை விட இந்த முறை தேர்தல் இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஷால் தயாரிப்பாளர் சங்க பிரச்சனையில் இருக்கும் நிலையில், தற்போது நடிகர் சங்க தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்