ஆப்நகரம்

தொடர்ந்து போராட்டம் நடக்கும்: நடிகர் விஷால்!

பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தை தொடர்ந்து நடக்கும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Mar 2018, 3:09 pm
டிஜிட்டல் சர்வீஸ் புரோவைடர்க்கு எதிராக படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இதனால் பல புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த போராட்டம் தொடரும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil film producers council will continue its protest says actor vishal
தொடர்ந்து போராட்டம் நடக்கும்: நடிகர் விஷால்!


அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘நமது திரைத்துறையின் நலன் கருதி கடந்த ஒரு மாத காலமாக தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிட்டல் சர்வீஸ் புரோவைடர்க்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 5.3.2018 ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜாயிண்ட் ஆக்‌ஷன் கமிட்டி சார்பில் ஏற்கனவே டிஜிட்டல் சர்வீஸ் புரோவைடர்க்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Film Producers Council will continue its Protest says Actor Vishal.

அடுத்த செய்தி

டிரெண்டிங்