ஆப்நகரம்

Soundarya Vishagan Wedding: சௌந்தா்யா ரஜினிகாந்த்க்கு இன்று திருமணம்

நடிகா் ரஜினிகாந்தின் மகள் சௌந்தா்யா ரஜினிகாந்த்க்கு இன்று திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Samayam Tamil 11 Feb 2019, 7:37 am
நடிகா் ரஜினிகாந்தின் மகள் சௌந்தா்யா ரஜினிகாந்திற்கு இன்று காலை 9 – 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் திருமணமும் தொடா்ந்து இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Samayam Tamil Rajini Soundarya


நடிகா் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குநருமான சௌந்தா்யாவுக்கும், தொழிலதிபா் விஷாகன் வனங்காமுடிக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இன்று திருமணம் நடைபெறும் நிலையில் கடந்த 8ம் தேதி முதலே திருமணத்திற்கான சம்பிரதாயங்கள் விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

நேற்று நடைபெற்ற காலை போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் அவரது நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடனம் ஆடிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சௌந்தா்யா, விஷாகன் தம்பதியின் திருமணம் இன்று காலை 9 – 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடா்ந்து இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் பழனிசாமி, எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கும், நெருங்கிய சொந்தங்களுக்கும் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்