ஆப்நகரம்

100 கோடிக்கு மேல் கடன் வாங்கி, படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் கெளதம் மேனன்!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன், சொந்தமாக பல படங்களை எடுத்து தற்போது ரூ. 150 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 20 Mar 2019, 4:07 pm
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் வளரும் தலைமுறையினர்களுக்கு பல அழகான காதல் கதைகளை எடுத்து சொன்னவர். தற்போது அவர் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
Samayam Tamil gautham-menon


இந்தப் படத்தின் ரிலீஸ் தேதிக்காக பலரும் காத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் படம் வெளியாவது சந்தேகமாகவே உள்ளது. எல்லாம் பணப்பிரச்சனை தானாம்.

‘துருவ நட்சத்திரம்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என இருபடத்திறாக கடன் கொடுத்த தொகை தற்போது வட்டியோடு சேர்த்து ரூ 150 கோடியை எட்டியுள்ளதாக ஃபைனான்சியர் ஒருவர் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் இப்படத்திற்காக கொடுக்க வேண்டிய சம்பளத்தில் ரூ 1 கோடியே 70 லட்சம் பாக்கி இருக்கிறதாம். கௌதம் மேனனுக்கு படத்தயாரிப்பால் தான் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்