ஆப்நகரம்

அஜித்துக்கு சிக்கல்: ஃபைனான்சியர்கள் சூழ்ச்சியால் நேர்கொண்ட பார்வை வெளியாவதில் புதிய சிக்கல்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 24 Jul 2019, 12:45 pm
தமிழ் சினிமா உலகின் உச்சநட்சத்திரம் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால், இப்படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று சில ஃபைனான்சியர்கள் தீவிரமாக திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முழு காரணமாக கருதப்படுவது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மட்டுமே. ஏனென்றால், இதுவரை நேர்கொண்ட பார்வை படத்தின் விநியோக உரிமையை யாருக்கும் விட்டுதரவில்லை. தானாகவே இப்படத்தை வெளியிட தீவிரம் காட்டி வருகிறார். இது ஒரு புறம் இருக்க, நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட, ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம், போனி கபூருக்கு ரூ.5 கோடி முன்பணமாக கொடுத்து இப்படத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ajith 4


Muttiah Muralitharan Biopic: பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி?



மும்பை கமிஷனராக நடிக்கும் ரஜினிகாந்த்- மீண்டும் கசிந்த தர்பார் பட ஸ்டில்ஸ்..!

கடந்த 2013ம் ஆண்டு மத கஜ ராஜா படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனத்திற்கு இன்னும், அந்தப் படத்தை வெளியிட முடியாமல், பல கோடி ரூபாய் கடனில் தவித்து வரும் நிலையில், எப்படி, ரூ.5 கோடி கொடுத்த நேர்கொண்ட பார்வை படத்தை வாங்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. அதாவது, இப்படத்தின் மூலம் தங்களது மொத்த கடனையும் வசூல் செய்து விடலாம் என்று சில ஃபைனான்சியர்கள் ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனத்தின் உரிமையாளர் மனோகர் பிரசாத்திடம் ரூ.5 கோடிக்கான காசோலை கொடுத்து அனுப்பியதாகவும், இப்படத்தை மனோகர் பிரசாத் விநியோகம் செய்யும் பட்சத்தில் அப்படத்திற்கு வசூலாகும் தொகையில் இருந்து பெரும் பகுதியை தங்களது கடனுக்கு வசூலித்துக் கொள்ளும் வகையில், பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் இரவு நெருக்கடி கொடுத்து எழுதி வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Ajith: அஜித் – வித்யா பாலன் பாடும் அகலாதே பாடல் லிரிக் வீடியோ எப்போது?


ஏனென்றால், கடைசி நேரத்தில் படத்தை வெளியிடவிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர் போனி கபூர் பணம் தருவார். இல்லையென்றால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும். இதுதான் ஃபைனான்சியர்களின் புதிய பிளான் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, ஃபைனான்சியருக்கும், அஜித்திற்கும் என்ன பிரச்சனை? ஏன், படத்தை வெளியிடவிடாமல் மறைமுகமாக மங்காத்தா ஆடுகிறார்கள் என்றால், அதற்கு அஜித் படம் நடித்து கொடுக்காதது தான் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆம், சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் இப்படத்தை விநியோகம் செய்த ஃபைனான்சியர்கள் ஆகியோருக்கு இப்படத்தின் மூலமாக நல்ல லாபம் கிடைத்தது. அதனால், என்னவோ, இந்த ஃபைனான்சியர்கள், அடுத்து நமக்கு தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு படம் நடித்து கொடுப்பார் என்றும், அதனால், நாமும் நல்ல லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், அஜித் நேர்மை தவறால், ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்குப்படி அவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்டை பார்வை படத்தை நடித்துக் கொடுத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படமும், போனி கபூர் தயாரிப்பில் எனும்போது ஃபைனான்சியர்களுக்கு ஷாக்கிற்கு மேல் ஷாக்.

மற்ற தயாரிப்பாளர்களைப் போன்று இல்லாமல், ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அல்ல. தனது சொந்த செலவில் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிக்கும் ஒன்னா நம்பர் தயாரிப்பாளர். நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அடுத்த படமும் அவருக்கு தான். இதனைக் கேட்ட ஃபைனான்சியர்களுக்கு அதிர்ச்சி.

இது போன்ற காரணங்களால் நேர்கொண்ட பார்வை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் போனி கபூர் தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால், கண்டிப்பாக தல ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்