ஆப்நகரம்

தனது மனைவிக்காக ரூ. 55 கோடியில் வீடு வாங்கியிருக்கும் பிரபல நடிகர்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், தனது மனைவி மீராவுக்காக ரூ. 55கோடியில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.

Samayam Tamil 23 Jul 2018, 4:13 pm
பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், தனது மனைவி மீராவுக்காக ரூ. 55கோடியில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90


சினிமா நடிகர்கள் பலர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். அதிலும் பாலிவுட் நடிகர்கள் தமிழ் நடிகர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர். அதேபோல் அவர்கள் வசிக்கும் வீடுகள் எவ்வளவு கோடியில் இருக்கும் என்று ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது.

சில நடிகர்கள் குடியிருக்கும் வீட்டின் விலையை கேட்டால் பலருக்கும் தலைசுற்றி விடும். அந்தளவுக்கு பல கோடியில் இருக்கும். தற்போது பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

நடிகர் ஷாஹித் கபூர், மும்பை வர்லி பகுதியில் ‘த்ரி சிக்ஸ்டி வெஸ்ட் டவர்’ பி.ஜே.வில் 42 மற்றும் 43வது ப்ளோர்களை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ. 55.6 கோடியாம். இதற்காக 2.9 கோடி ரூபாய் ஸ்டாம்ப் டியூட்டியாக ஷாஹித் செலுத்தியுள்ளார்.

விரைவில் ஷாஹித் கபூரின் மனைவி மீரா இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். தனது மனைவிக்காக இந்த வீட்டை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்