ஆப்நகரம்

பாகுபலி2: முதல் விமர்சனம்: பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்த சினிமா விமர்சகர்

பாகுபலி2 படத்தின் விமர்சனத்தை சினிமா விமர்சகர் உமையர் சந்து வெளியிட்டுள்ளார்.

TNN 28 Apr 2017, 12:45 am
பாகுபலி2 படத்தின் விமர்சனத்தை சினிமா விமர்சகர் உமையர் சந்து வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil first review of baahubali 2 by umair sandhu
பாகுபலி2: முதல் விமர்சனம்: பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்த சினிமா விமர்சகர்


எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி2 படத்தின் பிரீமியர் ஷோ கடந்த 25ம் தேதி துபாயில் வெளியிடப்பட்டது. இப்படத்தை பார்த்த திரைப்பட விமர்சகர் உமையர் சந்து கூறுகையில், பாகுபலி2 படத்தின் பர்ஸ்ட் ஆப் நல்லாயிருந்தது. மொத்தமாக பார்க்கும் படியாகவும், கண்களால் ரசிக்கும்படியாகவும் இருந்தது. படம் முழுவதும் எந்த ஏமாற்றமும் இல்லை.

படத்தின் ஹீரோ பிர்பாஸ்க்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், செகண்ட் ஆப் படமும் நல்லாயிருந்தது. இது போன்ற இந்திய சினிமா படத்தை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. இந்த வெள்ளிக்கிழமை இன்று வரலாறு மறுபரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகையில் பாகுபலி2 படம் மார்வெலஸ். படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை எல்லாம் பென்டாஸ்டிக். படத்தின் ஹீரோ பிரபாஸ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராணா, அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோரும் அற்புதமாக நடித்துள்ளனர். சத்யராஜ் உள்பட மற்ற துணை நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்திய திரைப்பட இயக்குனர் கனவு கண்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் என்று உமையர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு 5க்கு 5 ரேட்டிங்கும் கொடுத்துள்ளார்.

Dubai film critic Umair Sandhu has given a 5-star rating to Baahubali 2: The Conclusion, saying the movie got a standing ovation in the UAE.

அடுத்த செய்தி

டிரெண்டிங்