ஆப்நகரம்

'தல 57' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

தல அஜித், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

TNN 6 Sep 2016, 5:24 pm
சென்னை: தல அஜித், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
Samayam Tamil first schedule of ajiths thala 57 wrapped up
'தல 57' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு


கடந்த ஒரு மாதமாக ஐரோப்பாவில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்புக்கு முன்னதாகவே 'தல 57' படக்குழு ஐரோப்பா சென்றடைந்ததாகவும், சில ஒத்திகைகள் நடத்திய பின்னர் படப்பிடிப்பை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை வந்தடைந்த 'தல 57' படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சிங்காரச் சென்னையில் நடத்தவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதுவரை பெயரிடப்படாத இப்படத்துக்கு 'துருவன்' என்ற தலைப்புடன், பல்வேறு தலைப்புகளை படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்குமார், சர்வதேச குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இப்படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அஜித்தின் வெற்றி பட இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 'வேதாளம்' படத்தைத் தொடர்ந்து அனிருத் இரண்டாவது முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்