ஆப்நகரம்

ஹங்கேரியில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் 'பாகுபலி 2'!

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் முதன் முறையாக வெளியாகும் இந்திய திரைப்படம் 'பாகுபலி 2' என தகவல் வெளியாகியுள்ளது.

TNN 27 Apr 2017, 4:10 pm
புத்தாபெஸ்ட்: ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் முதன் முறையாக வெளியாகும் இந்திய திரைப்படம் 'பாகுபலி 2' என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil first time an indian film baahubali2 is screening in budapest hungary
ஹங்கேரியில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் 'பாகுபலி 2'!


எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒன்று வெளியாகிவிருப்பது அங்கு வசிக்கும் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக ஹங்கேரியில் வாழும் இந்தியர் ஒருவர் தனது பூரிப்பினை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது டுவீட்டில், 'ஹங்கேரியில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் 'பாகுபலி 2'' என குறிப்பிட்டு, அத்துடன் தனது டிக்கெட்டுகளையும் பகிர்ந்துள்ளார்.
First time, an Indian film #Baahubali2 is screening in Budapest, Hungary #wkkb @AndhraBoxOffice @BaahubaliMovie pic.twitter.com/7qpKX9ADCh — Ragavendar Reddy V (@tweets4mRaghu) April 26, 2017 பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி அசுரர் வேகத்தில் விற்றுத் தீர்ந்தது. எனினும்,'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்பதை அறிந்துக் கொள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்கமால் திரையரங்கின் வாசல்களில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இப்படம் அமைந்துள்ளதாக வெளிநாட்டு விமர்சகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

First time, an Indian film #Baahubali2 is screening in Budapest, Hungary.

அடுத்த செய்தி

டிரெண்டிங்