ஆப்நகரம்

நாயகியிலிருந்து வில்லியாக மாறும் காஜல் அகர்வால்!

நாயகி கேரக்டரில் நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக வில்லி கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 31 Dec 2018, 6:15 pm
தற்போது நடிகை காஜல் அகர்வால் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகியாக காஜல் நடித்துள்ளார். இந்தப் படம் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தின் ரீமேக்காகும். இந்தியில் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் நடித்திருந்தார். தற்போது இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழ் ரீமேக்கில்தான் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
Samayam Tamil kaajal-agarwal


அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஆக்சன் கலந்த ரோலில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால், தெலுங்கில் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை தேஜா இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நெகடீவ் கலந்த வேடத்தில் நடிக்கிறார். அதாவது பணத்திற்காக எதையும் செய்யும் பெண்ணாக அவர் இந்த படத்தில் நடிக்கிறாராம் காஜல். முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் வில்லியாக களமிறங்குகிறார் நடிகை காஜல் அகர்வால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்