ஆப்நகரம்

Ajith Viswasam: அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தை ஏன் பார்க்கணும்? இதோ 5 காரணங்கள்!

சென்னை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் படமான ‘விஸ்வாசம்’ பொங்கலை ஒட்டி நாளை வெளியாகிறது.

Samayam Tamil 9 Jan 2019, 2:56 pm
பொங்கலை ஒட்டி ஒரே நாளில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் திரைக்கு வருகின்றன. ஒன்றரை வருடத்திற்கு பிறகு அஜித் படம் ஒன்று வெளியாகிறது. இதனால் எதிர்பார்ப்பு மிக அதிகமாகி உள்ளது. ‘விஸ்வாசம்’ படம் ஏன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகும் என்பதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil Viswasam


1 - படத்தின் மொத்த நேரம்

இந்தப் படத்தின் மொத்த நேரம் 2 மணி 28 நிமிடங்கள். முதல் பாதி ஒரு மணி 16 நிமிடங்கள். இரண்டாவது பாதி ஒரு மணி 12 நிமிடங்கள். பேட்ட படத்துடன் ஒப்பிடுகையில், 23 நிமிடங்கள் விஸ்வாசம் குறைவான கால அளவைக் கொண்டுள்ளது. இது மிகப்பெரிய பிளஸாக கருதப்படுகிறது.

2 - நட்சத்திர பட்டாளம்

அஜித் உடன் நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒரே படத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றனர். இதனால் ஒரு பக்கம் மாஸாகவும், மறுபக்கம் நகைச்சுவை சரவெடியாகவும் விஸ்வாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 - இமான் இசை

இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னர் வெளிவந்த இரு படங்களில் மாஸ், கிளாஸ் என இமான் பட்டையை கிளப்பி இருந்தார். விஸ்வாசம் டிரைலரில் வந்த பின்னணி இசையே போதும். மிக அற்புதமாக அமைந்திருந்தது. இதேபோல் படம் முழுவதும் நிறைய மாஸ் பின்னணி இசையை நாம் எதிர்பார்க்கலாம்.

4 - சிவா இயக்கம்

அஜித் - சிவா கூட்டணி 4வது படம் ‘விஸ்வாசம்’. அஜித்திற்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாவதற்கு சிவாவும் ஒரு காரணம். வீரம், வேதாளம் படங்களைப் போன்று, விஸ்வாசம் படத்திற்கு இருமடங்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 - தல அஜித்

படத்தின் பெயர் அஜித்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. மற்றொரு பக்கம் ’பேட்ட’ படத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, நவாசுதீன், பாபி சிம்ஹா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், விஸ்வாசம் படத்தில் தனி ஆளாக ‘அஜித்’ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமை ரூ.52 கோடி அளவிற்கு விற்பனையாகியுள்ளது. எனவே ரூ.85 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தாலே, தமிழ்நாட்டில் ’விஸ்வாசம்’ புதிய சாதனை படைக்கும். பொங்கல் பண்டிகையின் போது பெரிய விடுமுறையில் வெளியாவதால், பாசிடிவ் கருத்துகள் வெளிவந்தாலே போதும். படம் மரண ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்