ஆப்நகரம்

வாத்தி கமிங்.. வெளிநாட்டிலும் விஜய் பாட்டுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பாருங்க

வாத்தி கமிங் பாடலுக்கு வெளிநாட்டினர் பொது இடத்தில் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Samayam Tamil 9 May 2020, 4:30 pm
கத்தி படத்திற்கு பிறகு விஜய்-அனிருத் கூட்டணி சேர்ந்துள்ள படம் மாஸ்டர். கத்தி படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பதால் மாஸ்டர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதத்தில் அனிருத் இசையமைத்துள்ள மாஸ்டர் பட பாடல்கள் எல்லாம் இணையத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளன.
Samayam Tamil Foreigners dance for Vaathi Coming song


வாத்தி கமிங் பாடல் வீடியோவில் அனிருத் நடனம் ஆடி இருந்தார். அதுவும் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆனது. டிக்டாக்கில் பல லட்சம் வீடியோக்கள் வாத்தி கமிங் நடனத்துடன் ரசிகர்கள் பதிவிட்டிருக்கிறார்கள். சில வாரங்கள் முன்பு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டிருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் வாத்தி கமிங் பாடலுக்கு பொது இடத்தில் சிலர் நடனம் ஆடும் வீடியோஇணையத்தில் வைரலாகி உள்ளது.

சோனி மியூசிக் நிறுவனம் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகி இருக்கவேண்டும். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போனது. இன்னும் மாஸ்டர் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடையாத நிலையில், தற்போது அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளதால், இறுதிக்கட்ட பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரிலீஸ் தேதி என்ன என்பதை தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்பே அறிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்