ஆப்நகரம்

யானை தந்தங்கள் வழக்கு: 7ஆண்டு கழித்து சிக்கலில் சிக்கிய மோகன்லால்

மோகன் லால் வீட்டிலிருந்த இருந்த தந்தங்கள் தொடர்பான வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Sep 2019, 12:43 pm
மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2012ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்பொழுது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அதை வருமான வரித்துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்து, மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Samayam Tamil mohanlal


kaappaan சூர்யா உழைப்புக்கு ஆப்பு வைத்த தமிழ் ராக்கர்ஸ்

இதையடுத்து கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களைத் திருப்பி தருமாறு அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம், மோகன்லால் கோரிக்கை வைத்தார். அரசு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மோகன்லாலிடம் மீண்டும் தந்தங்கள் கொடுக்கப்பட்டது.

விருது விழாவுக்கு படு கவர்ச்சி உடையணிந்து சென்ற பேட்ட நடிகை! வசைபாடும் நெட்டிசன்கள்

இந்த நிலையில் அரசின் இந்த செயலை கண்டு 7ஆண்டுகள் பிறகு ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கோடநாடு வனத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்