ஆப்நகரம்

3 முறை அபார்ஷன், நிர்வாண போட்டோக்களை வைத்து மிரட்டுகிறார் மாஜி அமைச்சர்: நடிகை புகார்

அவர் கொடுமை தாங்க முடியாமல் விலக முடிவு செய்தபோது நிர்வாண புகைப்படங்களை வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுவதாக நடிகை சாந்தினி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 May 2021, 5:23 pm

ஹைலைட்ஸ்:


  • முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார்
  • மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார்
  • தனக்கு மணிகண்டன் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்கிறார் சாந்தினி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil chandni
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சாந்தினி. தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக சாந்தினி தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்புணர்வு செய்தார், கொலை மிரட்டல் விடுக்கிறார்: முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்இது குறித்து சாந்தினி மேலும் கூறியதாவது,
நான் மணிகண்டனை அவரின் அமைச்சர் பங்களாவில் சந்தித்தேன். அது பிசினஸ் தொடர்பாக பேச என்று சொன்னதால் சென்றேன். அது நட்பாக மாறி பின்னர் உறவானது.

எனக்கு வீட்டில் பிரச்சனை இருக்கிறது, மனைவி சரியில்லை என்றார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் சரி என்றேன். அந்த அமைச்சர் பங்களாவுக்கு தான் சென்று கொண்டிருந்தேன். அதன் பிறகு பெசன்ட் நகரில் வசிக்கிறோம்.

இந்த 5 ஆண்டுகளில் நிறைய போராட்டங்கள். என்னை நிறைய அடிச்சிருக்கிறார். நான் கர்ப்பமானேன். அது குறித்து கேட்டதற்கு, சட்டப்படி திருமணம் செய்தால் தான் நீ குழந்தை பெற முடியும் என்று சொல்லி அவரின் நண்பரான டாக்டர் அருண் மூலம் கருவை கலைக்க வைத்தார். இது இரண்டு, மூன்று தடவை நடந்திருக்கிறது. நான் ஒரு முறை அமைச்சர் பங்களா முன்பு பெட்ரோல் எல்லாம் ஊத்திக் கொண்டேன்.

என்னை மிரட்டத் துவங்கினார். என் பெற்றோரை மிரட்டினார். ராமநாதபுரத்தில் ரூ. 1 லட்சம் கொடுத்தால் உன்னை கொல்ல ஆட்கள் வருவார்கள் என்றார். எனக்கு தெரியாமல் எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறார்.

அவரை விட்டு விலக முடிவு செய்தேன். நான் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து மிரட்டத் துவங்கினார். எனக்கென்று ஒரு லைஃப் வேண்டும். அதனால் என் வழக்கறிஞரை தொடர்பு கொண்டேன். அதன் பிறகே காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்