ஆப்நகரம்

அஜித்தின் ‘பிங்க்’ ரீமேக் படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்கள்!

தல அஜித் தற்போது நடித்து வரும் ‘பிங்க்’ ரீமேக் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார் இசையமைப்பாள் யுவன் சங்கர் ராஜா.

Samayam Tamil 19 Feb 2019, 5:10 pm
விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தொடங்கியுள்ளார் அஜித். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பின்போது அஜித் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil pink-remake


2016 ஆம் ஆண்டு வெளியான ’பிங்’ திரைப்படத்தில் அமிதாப்பச்சன் வழக்கறிஞராக நடித்திருப்பார் . இந்நிலையில் அந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பதால், அமிதாப்பச்சனின் கெட்டப்புடன் அஜித்தின் கெட்டப்பை ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படம் மே 1ல் வெளியாக இருப்பதால் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “இதில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது. இரண்டு மட்டும் தான் முழு பாடலாக இருக்கும். மீதம் இரண்டும் தீம் மியூசிக் தான். ஒருபாடல் முடித்துவிட்டேன், மற்றொரு பாடலுக்கான பணி நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார். பிங்க் படத்தில் பாடல்களே கிடையாது என முன்பு கூறிய தகவல்கள் தற்போது பொய்யாகி விட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்