ஆப்நகரம்

காப்பியடிச்சு படம் எடுக்குறீங்க...அதையாவது ஒழுங்கா எடுங்களேன்: ஹாலிவுட் இயக்குனர்!

பெலிஜியம் நாட்டு இயக்குநர் ஜெரோம் சாலே தன்னுடைய largo winch படத்தை காப்பியயடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார்.

Samayam Tamil 3 Sep 2019, 5:43 pm
பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் பலகோடி வசூலை ஈட்டி வருகிறது. ஈஸ்வர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பிரபாஸ். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடித்த "பாகுபலி" திரைப்படம் உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பாகுபலி இரண்டாம் பாகம் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்தது.
Samayam Tamil Prabhas Saaho


இரண்டு படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக மிரட்டியிருப்பார். பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் சுமார் 150 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை இன்று வரை வேறு எந்த தமிழ் படமும் கூட முறியடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.


தற்போது இவர் சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.

Vikram: ரிலீஸாகிறது துருவ நட்சத்திரம்!

MK Stalin: அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் மு.க.ஸ்டாலின், தளபதி விஜய் சந்திப்பு!

சாஹோ இத்தனை கோடி வசூலா?

"சாஹோ" படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் உரிமைகள் விற்பதன் மூலம் மட்டுமே 320 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சாட்டிலைட், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமைகள் விற்கப்பட்டு உள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாஹோ படம் கடந்த வெள்ளி அன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சாஹோ திரைப்படம் 294 கோடியை எட்டியுள்ளது. ஆனால் "சாஹோ" படத்திற்கான விமர்சனங்கள் கலவையான வகையிலேயே வந்து கொண்டிருக்கின்றன. படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை மகிழ்விக்கவில்லை எனும் கருத்து பரவலாகி வருகிறது.

இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிரபல இயக்குநர் ஜெரோம் சாலே தன் படத்தை காப்பியடித்தே "சாஹோ" எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி தன் சமூக வலைத்தளபக்கத்தில் அவர் கூறியுள்ளது... இன்னொரு முறையும் என் படம் இலவசமாக காப்பியடிக்கப்பட்டு தெலுங்கில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுவும் முதல் படத்தைப் போலவே மோசமான படமாக அமைந்துள்ளது. தெலுங்கு இயக்குநர்களே என் படைப்பை திருடுவதாக இருந்தால் அதை முறையாக எடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த விஷயம் சினிமா உலகில் பெரும் புயலைக் கிளப்பியிருகிறது. largo winch படத்தில் உள்ள பல காட்சிகள் சாஹோ படத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த வருடம் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அங்கயத்தவசி படமும் இப்படத்தின் காப்பியே எனக் கூறப்படுகிறது. அதனால் தான் பெல்ஜியம் இயக்குநர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்