ஆப்நகரம்

பெண்ணை படுக்கைக்கு அழைத்தால் என்ன தப்பு? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்

சென்னை : சினிமா துறையில் பெரும் பூகம்பத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது மீ டு இயக்கம். அப்படி இருக்க ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து கூறியிருக்கிறார்.

Samayam Tamil 29 Oct 2018, 7:00 pm
சென்னை : சினிமா துறையில் பெரும் பூகம்பத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது மீ டு இயக்கம். அப்படி இருக்க ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து கூறியிருக்கிறார்.
Samayam Tamil marimuthu


வைரமுத்து மீது சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்து வரும் மீ டூ விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் புயலை கிளப்பி வருகின்றது.

வைரமுத்து அழைத்தது தவறில்லை :
மீ டூ விவகாரம் குறித்து பேசிய பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குனருமான ஜி மாரிமுத்து வைரமுத்து ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்தது என்ன தவறு என கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மீ டூ விவகாரம் குறித்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் வைரமுத்து ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்ததில் என்ன தவறு இருக்கிறது. அவர் ஒரு ஆணை அழைத்திருந்தால் தான் தவறு. விருப்பமுள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விரும்பாதவர்கள் இப்படி ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட புகாரால் வைரமுத்துவின் புகழுக்கு சிறிதளவும் கலங்கம் ஏற்படாது. அவர் தமிழுக்கு செய்த தொண்டு ஏராளம். இந்த மீ டூ விவகாரம் இன்னும் சில நாட்களில் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பது தான் உண்மை என தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாலியல் சீண்டல் குறித்து தைரியமாக கூறி வரும் நிலையில், ஜி மாரிமுத்துவின் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்