ஆப்நகரம்

இசை, நடிப்பை தவிர்த்து கிரிக்கெட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

தூத்துக்குடி அணிக்கு விளம்பர தூதராக மாறிய இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்

TNN 7 Aug 2016, 12:48 pm
சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ், குசேலன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நான் ராஜாவாக போகிறேன், தலைவா, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வலம் வந்தார்.
Samayam Tamil g v prakash entered into cricket
இசை, நடிப்பை தவிர்த்து கிரிக்கெட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்


டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து த்ர்ஷா இல்லனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். புரூஸ் லி மற்றும் கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கிரிக்கெட்டிலும் களமிறங்கியுள்ளார். இந்த மாத இறுதியில் தொடங்கயிருக்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான ‘(TUTI PATRIOTS’) தூத்துக்குடி அணிக்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தீம் பாடலையும் பாடியுள்ளார். ‘நம்ம பயலுக’ என்ற அடை மொழியோடு தொடங்கும் தீம் பாடல் அணி வீரர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், வரும் 12ம் தேதி இந்த ஆல்பம் வெளிவரும் என்றும் அணியின் உரிமையாளரும், ஆல்பர்ட் திரை அரங்கியின் உரிமையாளருமான முரளிதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்