ஆப்நகரம்

இரு படங்களுக்கு இசை: சந்தோஷத்தில் ஜி.வி.பிரகாஷ்!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தான் நடித்த படத்தையும், விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் இசையையும் முடித்துவிட்டார்.

TOI Contributor 5 Mar 2016, 3:33 pm
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தான் நடித்த படத்தையும், விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் இசையையும் முடித்துவிட்டார்.
Samayam Tamil g v prakash has finished music for 2 films
இரு படங்களுக்கு இசை: சந்தோஷத்தில் ஜி.வி.பிரகாஷ்!

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் விஜய்யின் ‘தெறி’ படத்தின் பாடல்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டிருந்தார். தற்போது ‘தெறி’ படத்தின் பாடல்களின் பணியை அவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக தெரிகிறது.
அதே நேரத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டரை மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டைரக்டர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்