ஆப்நகரம்

ஜி.வி. பிரகாஷ் ஜோடி மடோனா செபாஸ்டியன்!

விஜய் சேதுபதியின் நண்பர் கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளார்.

TOI Contributor 7 Jan 2017, 4:07 pm
விஜய் சேதுபதியின் நண்பர் கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil g v prakash will be acting with madonna sebastian
ஜி.வி. பிரகாஷ் ஜோடி மடோனா செபாஸ்டியன்!


ஜி.வி. பிரகாஷ் நடிப்பு ஒரு பக்கம், மியூசிக் ஒரு பக்கம் என்று மாறி மாறி பிஸியாக இருந்து வருகிறார். பொங்கல் அன்று அவர் நடிப்பில் வெளியான ‘ப்ருஸ் லீ’ படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘4ஜி, ‘சர்வம் தாளமயம்’, ‘அடங்காதே’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

இதையெல்லாம் முடித்தப் பின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தை நாம் ஏற்கனவே சொன்னது போன்று ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘றெக்க’ படங்களின் தயாரிப்பாளரும், விஜய்சேதுபதியின் நண்பருமான கணேஷ் தயாரிக்க இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட் பொங்கலன்று வெளியாகவுள்ளது.

g.v. prakash will be acting with madonna sebastian

அடுத்த செய்தி

டிரெண்டிங்