ஆப்நகரம்

சிம்புவுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ்

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படம் மோதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 3 Nov 2016, 7:08 pm
சென்னை: சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படம் மோதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil g v prakashs kik to clash withsimbus aym
சிம்புவுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ்


இயக்குனர் கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அச்சம் என்பது மடமையடா' படம் வருகிற நவ.11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படமும் அதே நாளில் வெளியாவதாக கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் இரண்டு படங்களும் தணிக்கைக்கு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அம்மா கிரியேஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை நவ.11 வெளியாகும் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

G.V.Prakash's 'KIK' to clash withSimbu's 'AYM'.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்