ஆப்நகரம்

விஜய் – அஜித் இணையும் பான் இந்தியா படம்: பிரபல இயக்குனரின் தந்தை பரபரப்பு பேட்டி.!

விஜய், அஜித் இருவரும் விரைவில் இணைந்து நடிக்கவுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Jun 2022, 7:16 am
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து ‘மன்மத லீலை’ படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. தற்போது நாக சைதன்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் விஜய், அஜித்தை இணைத்து புதிய படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
Samayam Tamil Vijay - Ajith
Vijay - Ajith


மோகன் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வந்த விஜய் நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். அப்போது இயக்குநர் வெங்கட் பிரபு இருவருடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படம் இணையத்தில் வைரலாகும் போதெல்லாம் விஜய், அஜித் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும். அதனை வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருவார்கள். இந்நிலையில் விஜய், அஜித் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளரும், வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கூறியிருந்தார். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவியதை தொடர்ந்து வெங்கட் பிரபு, இப்படியொரு தகவலா என அவரே ஆச்சரியப்படும் அளவிற்கு Gif ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராதிகா என் அம்மா கிடையாது.. அப்பாவோட இரண்டாவது மனைவி: வரலட்சுமி பரபரப்பு பேட்டி.!

இதன்மூலம் அஜித், விஜய் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. அஜித்தின் பிளாக் பஸ்டர் படமான 'மங்கத்தா' வெளியான சமயத்திலே விஜய், அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை இருப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார் வெங்கட் பிரபு. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டுமென்பது ரசிகர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்