ஆப்நகரம்

ஆளே மாறிய நடிகர்... யார்னு தெரியுதா பாருங்க!

ஜிம்மிற்கு சென்று ஆளே மாறிவிட்ட நடிகரை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்க.

Samayam Tamil 28 Mar 2020, 1:28 pm
காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம். இவர் நடிப்பில் பெரிய அளவில் எந்த படமும் வெற்றி பெறவில்லை. எனினும் இவரது துரு துரு நடிப்பு ரசிக்கத்தக்கதாகவே இருக்கும். காதல் கதைகளிலும், ஆக்ஷன் கதைகளிலும் நடித்து பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மஹாதேவகி உள்ளிட்ட படங்களில் நடித்ததும் இளைஞர்கள் மத்தியில் பெரிய இடம் கிடைத்தது. எனினும் கதாநாயகனுக்கு உரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை.
Samayam Tamil gautham


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதத்தில் வீட்டிலேயே இருக்கும் கௌதம், உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள படத்தை இங்கு காணுங்கள்



மிரட்டும் தோற்றத்தில் காட்சியளிக்கும் கௌதம் அதில் கேப்சன் ஒன்றையும் இட்டுள்ளார். ஒவ்வொரு மேகமும் ஒரு புதையலைச் சுமந்து செல்கிறது எனும் பொருள்படும்படியான வாக்கியம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

உடலை கட்டுமஸ்தாக்கிய பிறகாவது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார் என நம்புவோம் என்று இணையவாசிகள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்