ஆப்நகரம்

கௌதம் கார்த்திக் படத்துக்கு கிடைத்த ‘ஏ’ சான்றிதழ்!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Samayam Tamil 22 Mar 2018, 6:04 pm
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
Samayam Tamil iamk


சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் ‘ஹரஹர மஹாதேவஹி’ . இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இந்தப் படத்திலும் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்தப் படம் ஒரு மணி நேரம், 58 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்