ஆப்நகரம்

இசையமைப்பாளர் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் கௌதம் மேனன்!

தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் பெயரை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.

TNN 27 Mar 2017, 2:54 pm
தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் பெயரை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.
Samayam Tamil gautham menon suspense keeps the name of the composer
இசையமைப்பாளர் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் கௌதம் மேனன்!


இயக்குனர் கௌதம் மேனன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை அடுத்து தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், நடிகர் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இதில் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் அனைத்து டெக்னீசியன்கள், நடிகர், -நடிகைகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள கௌதம்மேனன், படத்தின் இசையமைப்பாளரை மட்டும் இப்போதுவரை சஸ்பென்சாக வைத்து வருகிறார்.

இதற்கிடையே இசையமைப்பாளர் யார் என்பதை சொல்லாமலேயே இரண்டு சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விட்டார். இப்போதுவரை இசையமைப்பாளரின் பெயரை மட்டும் சொல்லாமல், மிஸ்டர் எக்ஸ் என்று சஸ்பென்ஸ் வைத்து வருகிறார் கௌதம்மேனன்.

இந்த படத்திற்கு கௌதம்மேனனே இசையமைத்திருக்கலாம் என்றொரு செய்தி கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதையடுத்து, அந்த மிஸ்டர் எக்ஸ் நானில்லை என்று டுவிட் செய்திருக்கிறார் கௌதம்மேனன். இப்படி யூகங்கள் வெளியான பிறகும் அந்த இசைய மைப்பாளர் யார் என்பதை சொல்லாமல் அவர் சஸ்பென்சை நீட்டிப்பதற்கு காரணம், இந்த மியூசிக் டைரக்டர் சஸ்பென்சை வைத்தே படத்திற்கு பெரிய அளவில் பிரமோஷன் செய்ய கௌதம்மேனன் திட்டமிட்டிருப்பதுதான் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்