ஆப்நகரம்

தன்னோட வில்லனை ஹீரோவாக்கும் இயக்குனர்!

தன் படத்தில் வில்லனாக நடித்தவரை தற்போது ஹீரோவாக்குகிறார் இயக்குனர் கௌதம் மேனன்.

TNN 6 Jun 2017, 3:25 pm
தன் படத்தில் வில்லனாக நடித்தவரை தற்போது ஹீரோவாக்குகிறார் இயக்குனர் கௌதம் மேனன்.
Samayam Tamil gauthamstarts a new film his villain as the hero
தன்னோட வில்லனை ஹீரோவாக்கும் இயக்குனர்!


இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் நடிகர் விக்ரமைவைத்து ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். தனுஷ் ஹாலிவுட் படத்தில் பிஸியாக இருப்பதால், விக்ரமை வைத்து ‘துருவநட்சத்திரம்’ படத்தை முழுவீச்சில் எடுத்து வருகிறார் கௌதம் மேனன்.

இந்நிலையில், அடுத்ததாக அவர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, கௌதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் அருண் விஜய். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Gautham has started directing another film with Arun Vijay in the lead role. It is believed that Gautham is directing Arun Vijay's film when Vikram takes a break from 'Dhruva' for the shooting of his another film 'Sketch'.

அடுத்த செய்தி

டிரெண்டிங்