ஆப்நகரம்

‘தமிழ் படம் 2’ வெளியாவதில் சிக்கல்!

‘தமிழ் படம் 2’ தயாரிப்பாளர் சங்கம் வெளியீட்டு குழு ஒப்புதல் இல்லாமல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 10 Jul 2018, 4:39 pm
‘தமிழ் படம் 2’ தயாரிப்பாளர் சங்கம் வெளியீட்டு குழு ஒப்புதல் இல்லாமல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil tamil padam 1


நடிகர் மிர்ச்சி சிவா இயக்கத்தில் 2010ல் வெளியான படம் ‘தமிழ் படம்’. இந்தப் படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திலும் சிவாதான் ஹீரோவாக நடித்துள்ளார். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் தமிழ் சினிமாவையும், நடிகர்களையும், அரசியலையும், அரசியல்வாதிகளையும் கலாய்த்துள்ளார். படத்திற்கு ‘யு’ சானறிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பட வெளியீட்டு குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். ரிலிஸாகும் அத்தனை படமும் அந்த அமைப்பில் ஒப்புதல் வாங்க வேண்டுமாம். ஆனால் தமிழ்படம் 2விற்கு இன்னும் அந்த அமைப்பு ஒப்புதலை அளிக்கவில்லையாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்படகுழு ரிலிஸ் தேதியை அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்படம்2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்