ஆப்நகரம்

கான்புல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருதை ஜிப்ரானுக்கு வழங்கிய இங்கிலாந்து பார்லிமென்ட்!

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு ‘கான்புல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது இங்கிலாந்து பார்லிமென்ட்.

Samayam Tamil 29 Nov 2018, 8:16 pm
இசையமைப்பாளர் ஜிப்ரான் ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் படமே அவருக்கு முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை கொடுத்தது. அதையடுத்து வரிசையாக ‘வத்திக்குச்சி’, ‘குட்டிப்புலி’, ‘நையாண்டி’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘அமரகாவியம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
Samayam Tamil ஜிப்ரான்


மேலும் கமல்ஹாசனின் விருப்பத்திற்கு இணங்க ‘உத்தம வில்லன்’, ‘தூங்காவனம்’, ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். மேலும் ‘அறம்’, ‘மகளிர் மட்டும்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘ஆண் தேவதை’, உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையில் கடைசியாக வெளியாகி எல்லோரையும் மிரட்டிய படம் ‘ராட்சசன்’. ஜிப்ரானின் இசைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’, ஹன்சிகாவின் ‘மகா’, மாதவன் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் படம், ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஹோம் மினிஸ்டர்’, ‘உள்துறை மந்திரி’ உட்பட பல படங்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார்.

ஜிப்ரானுக்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை, இங்கிலாந்து பார்லிமென்ட்டில் இசைக்கான கான்புல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்