ஆப்நகரம்

‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலரை வெளியிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன்!!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலரை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்

Samayam Tamil 14 Feb 2018, 9:57 pm
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலரை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil goli soda 2 official movie trailer released by director gvm
‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலரை வெளியிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன்!!


கடந்த சில வருடங்களுக்கு முன், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ‘கோலி சோடா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அமோக வெற்றியைத் தந்ததால், அடுத்தப் படத்தில் விக்ரமை வைத்து இயக்கினார். அப்படம் எதிர்பாராதவிதமாக தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, விஜய் மில்டன் அடுத்ததாக ‘கோலி சோடா 2’ படத்தை இயக்கி வருகிறார். புதுமுக நடிகர்களை வைத்து உருவாகும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்