ஆப்நகரம்

கர்ப்பிணி பெண்ணாக நடித்து வரும் நடிகை கரீனா கபூர்!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக வெளியான அவரது புகைப்படம் காட்டியுள்ளது.

Samayam Tamil 1 Mar 2019, 6:18 pm
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை கரீனா கபூர். இவர் ஏராளமான சினிமா படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2012ல் நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற அழகான ஆண் குழந்தை இருக்கிறது.
Samayam Tamil kareena


திருமணத்திற்கு குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு, சினிமாவிலும் சிறப்பாக நடித்து வரும் கரீனாவை பலர் அண்மையில் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரிந்ததால் தானாம். இதனால் இரண்டாம் குழந்தைக்கு தாயாகியுள்ளார் என தகவல் பரவியுள்ளது.

ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வருகிறாராம். ‘குட் நியூஸ்’ என்ற இப்படம் வாடகை தாயை மையப்படுத்திய கதையாம். இதில் அவருடன் அக்‌ஷய் குமாரும் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்