ஆப்நகரம்

விஜய் 61 படத்தின் தலைப்பு குறித்து கசிந்த தகவல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரிடம் இருந்து கசிந்த தகவல் இணையத்தில் பரவிவருகிறது.

TOI Contributor 21 Jun 2017, 11:53 am
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரிடம் இருந்து கசிந்த தகவல் இணையத்தில் பரவிவருகிறது.
Samayam Tamil gossips about vijays next movie
விஜய் 61 படத்தின் தலைப்பு குறித்து கசிந்த தகவல்!


தெறியை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடந்துவருகிறது. நாளை விஜய்யின் பிறந்த நாள் என்பதால் படத்தின் முதல்பார்வை மற்றும் பெயரை வெளியிட உள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதி விஜய் 61 படத்தின் பெயர் மூன்று முகம் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் ஏப்ரல் ஃபூல் பண்ணவே அப்படி வெளியிட்டதாக விளக்கம் அளித்தது.

இந்நிலையில் விஜய் படத்தின் பெயர் மூன்று முகம் இல்லை என்றும் ஏற்கனவே வந்த பழைய படத்தின் பெயர் இல்லை எனவும் படக்குழுவில் இருந்து உறுதியாக தகவல் கசிந்துள்ளது. மிகவும் ஃபிரெஷ்ஷான பெயரை தான் படத்திற்கு வைத்துள்ளனர் என்று போஸ்டர் டிசைன் செய்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால் படத்தின் பெயரை தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்கத்தான் வேண்டும்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்