ஆப்நகரம்

GVM: AK62 படத்தில் நான் நடிக்கிறேனா ? கௌதம் மேனன் அளித்த விளக்கம்..!

அஜித்தின் ak62 படத்தில் வில்லனாக நடிப்பது பற்றி பேசிய கௌதம் மேனன்

Samayam Tamil 25 Sep 2022, 8:04 am

ஹைலைட்ஸ்:

  • அஜித்தின் AK62
  • கௌதம் மேனன் தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கௌதம் மேனன்
தமிழ் சினிமாவில் கிளாஸான இயக்குனர் என பெயரெடுத்தவர் கௌதம் மேனன். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வந்தன.

Thalapathy vijay: விஜய்யின் புகைப்படம்..விளாசி தள்ளும் அஜித் ரசிகர்கள்..! இதான் காரணமா ?

மேலும் இதனை கௌதம் மேனனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக கௌதம் மேனன் அஜித்தின் AK62 படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாக செய்திகள் உலா வந்தன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் அஜித் நடிக்கும் AK62 படத்தில்தான் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் வந்தது.

அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இதுபற்றி பேசிய கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் எனக்கு நெருங்கிய நண்பர். மேலும் அவர் AK62 படத்தை பற்றி என்னிடம் இதுவரை பேசவில்லை. ஒருவேளை அவர் என்னை நடிக்க அழைத்து அந்த ரோல் எனக்கு செட்டானால் கண்டிப்பாக அஜித்துடன் நடிப்பேன் என்றார் கௌதம் மேனன்.


இந்நிலையில் கௌதம் மேனன் அஜித்துடன் நடிப்பதைப்பற்றி பரவிய செய்தி வெறும் வதந்திதான் என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்