ஆப்நகரம்

‘கௌதமிபுத்ர சடர்கனி’ டீசர் விஜயதசமியில் வெளியீடு!

கௌதமிபுத்ர சடர்கனி’ படத்தின் டீசரை விஜய்தசமி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

TOI Contributor 5 Oct 2016, 4:13 pm
‘கௌதமிபுத்ர சடர்கனி’ படத்தின் டீசரை விஜய்தசமி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil gowthami putra satakarni teaser will be released in vijayadasami
‘கௌதமிபுத்ர சடர்கனி’ டீசர் விஜயதசமியில் வெளியீடு!


தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 100வது படம் ‘கௌதமிபுத்ர சடர்கனி’. இந்தப் படம் ஒரு வரலாற்றுப் படம். இந்தப் படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். பாலிவுட் நடிகையும், அரசியல் பிரமுகருமான ஹேமமாலினி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். 11ம் தேதி விஜயதசமி அன்று படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த செய்தி பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இந்தத் தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அக்டோபர் 11ம் தேதி காலை 8 மணிக்கு இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகவுள்ளது. படத்தை தயாரிப்பாளர் ராஜீவ் ரெட்டி தயாரித்துள்ளார். படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்