ஆப்நகரம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க முந்திக் கொள்ளும் கௌதம் மேனன்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை முதலில் இயக்கி வெளியிட இயக்குனர் கௌதம் மேனன், முயற்சி எடுத்து வருகிறார்.

Samayam Tamil 2 Jan 2019, 4:22 pm
இயக்குனர்கள் பாதிராஜா, ஏ.எல். விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க தனித்தனியாக முயற்சி செய்து வருகின்றனர். இதில் இயக்குனர் பிரியதர்ஷினி அதற்கான முயற்சியை தொடங்கி, நடிகை நித்யா மேனனை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
Samayam Tamil jayalalithaa


அதே நேரத்தில் ஏ.எல்.விஜய்யும், ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யாபாலனை தேர்வு செய்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா தற்போது ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி வருகிறார்.

இந்நிலையில் பாரதிராஜா உள்ளிட்ட 3 இயக்குனர்களையும் முந்திக்கொண்டு ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதை இயக்க களம் இறங்கியிருக்கிறார் இயக்குனர் கௌம் மேனன்.

ஆனால் இவர் இயக்கவுள்ளது வெப் சீரியலாக உருவாகிறது. இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். இதில் எம்ஜிஆர், ஷோபன் பாபு, இந்திரஜித் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெறவிருக்கிறதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்