ஆப்நகரம்

கின்னஸ் சாதனையில் காமெடி நடிகர்!

அதிக படங்களில் நடித்ததற்காக நடிகர் பிரம்மானந்தம் கின்னஸில் இடம்பெற்றுள்ளார்.

TNN 15 Jul 2016, 7:39 pm
அதிக படங்களில் நடித்ததற்காக நடிகர் பிரம்மானந்தம் கின்னஸில் இடம்பெற்றுள்ளார்.
Samayam Tamil guinness record done my comedy actor
கின்னஸ் சாதனையில் காமெடி நடிகர்!


தென்னிந்திய சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரம்மானந்தம் அதிக படங்களில் நடித்து சாதனை செய்ததற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தெலுங்கு சினிமா உலகின் அசைக்க முடியாத காமெடி நடிகர் பிரம்மானந்தம். 60 வயதாகும் பிரம்மானந்தம் 1980களில் அறிமுகமாகி இன்று வரை நடித்து வருகிறார். என்.டி.ராமராவ் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை அனைவருடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கி வருகிறார் பிரம்மானந்தம்.

இவர், படத்தில் 10 நிமிடம் தலையை காட்டினால் போதும் படம் ஹிட் தான் என்ற அளவுக்கு பெயர் பெற்றவர். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாது காணப்படுவார். இந்நிலையில் உலகிலேயே அதிக படங்களில் நடித்து சாதனை செய்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் பிரம்மானந்தம்.

30 ஆண்டுகளில் இவர் 1000 படங்களில் நடித்திருக்கிறார். அதோடு பத்மஸ்ரீ, சிவிலியன் போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தற்போது கமலின் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்