ஆப்நகரம்

கடவுள் இருக்கான் குமாரு சர்ச்சை! லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதில் அளித்த ஜி.வி!!

கடவுள் இருக்கான் குமாரு சர்ச்சை! லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதில் அளித்த ஜி.வி!!

TOI Contributor 22 Nov 2016, 7:47 pm
இயக்குநர் ராஜேஷ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை கலாய்ப்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் நடித்திருந்த நாயகன் ஜி.வி.பிரகாஷூக்கு தனது அடுத்த படத்தில் நல்ல ரோல் ஒன்று தருவதாகவும் கூறியிருந்தார்.
Samayam Tamil gv prakash answer to actress cum director lakshmi ramakrishnan
கடவுள் இருக்கான் குமாரு சர்ச்சை! லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதில் அளித்த ஜி.வி!!


இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். எனக்கு ஏற்ற நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும், இது குறித்து விரைவில் பேசலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காக்கா முட்டை, பரதேசி, ஆடுகளம் போன்ற நல்ல படங்களில் பணியாற்றி இருப்பதையும் ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்