ஆப்நகரம்

Venkat Pakkar 4ஜி இயக்குநர் இறந்துட்டார்னு என்னால நம்பவே முடியலயே: ஜி.வி. பிரகாஷ் கண்ணீர்

அருண் பிரசாத்தை என்றும் மிஸ் பண்ணுவேன் என்று ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 May 2020, 5:06 pm
ஷங்கரிடம் உதவியாளராக இருந்த கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த அருண் பிரசாத் என்கிற வெங்கட் பாக்கர் பைக்கில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவர் ஜி.வி. பிரகாஷின் 4ஜி படம் மூலம் தான் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து நடித்த 4ஜி படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் அருண் இறந்துவிட்டார்.
Samayam Tamil arun prasath


கடந்த 2016ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட 4ஜி படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப் போனது. தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல் படத்தின் ரிலீஸை பார்க்காமலேயே போய்விட்டீர்களே என தமிழ் திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அருண் பிரசாத் என்கிற வெங்கட் பாக்கர் குறித்து ஜி.வி. பிரகாஷ் கூறியிருப்பதாவது,

காலையில் தொலைபேசியில் வெங்கட் பாக்கர் இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பாக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. தமிழ்த் திரையுலகில் விரைவில் நல்ல இயக்குநர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் சென்றுவிட்டார்.

Arun Prasath ஜி.வி. பிரகாஷின் 4ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி: ஷங்கர் என்ன செய்யப் போறாரோ?

4ஜி கதையை அவர் என்னிடம் சொல்லும் போது, உடனே ஒப்புக் கொண்டேன். வித்தியாசமான களம் என்றிருந்தாலும், அந்தக் களத்தில் அவருடைய காட்சியமைப்புகள் மற்றும் அந்த கதையில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருடன் பேசியது, பழகியது எல்லாம் மறக்கவே முடியாது. வயது சிறியது என்றாலும், மூளை பெரியது. சொன்ன கதையைச் சொன்ன நாட்களை விட, மிகக் குறைவான நாட்களிலேயே முடித்து கொடுத்துவிட்டார் 4ஜி கதைக்களம் பற்றி படம் தயாரானவுடன் சொல்கிறேன். அந்தக் கதையோடு அவர் அந்தளவுக்கு ஊறியிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் எப்படியாவது ஒரு இயக்குநராக ஜொலித்துவிட வேண்டும் என்றி நினைத்த ஒரு இயக்குநர் இன்று காலமாகிவிட்டார். அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும், அவருடைய இயக்கத் திறமையை 4ஜி படம் மூலம் நாம் உணர்வோம். கண்டிப்பாக அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என இருக்கும்போது வெங்கட் பாக்கர் பற்றி இன்னும் நிறையச் சொல்வேன்.

கண்டிப்பாக என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ...

கண்ணீருடன்
ஜி.வி. பிரகாஷ் என்று தெரிவித்துள்ளார்.

அருண் கடைசியாக ட்வீட் செய்தது கூட ஜி.வி. பிரகாஷ் குமாரை பற்றித் தான். கடந்த 4ம் தேதி ஜி.வி. பிரகாஷ் தனது ஸ்டைலிஷான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த அருண் பிரசாத், அவர் செம ஸ்டைல் மற்றும் மாஸாக இருப்பதாக தெரிவித்தார்.
அருண் பிரசாத்தின் மரணம் குறித்து அறிந்த ஷங்கர் இதயம் நொறுங்கிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மட்டும் அல்ல பலரும் அருணின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Shankar முதலில் கிருஷ்ணா, இப்போ அருண் பலி: இதயம் நொறுங்கிப் போன ஷங்கர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்