ஆப்நகரம்

மிருதங்கம் கற்கும் ஜி.வி.பிரகாஷ்

பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்வம் தாள மயம்' திரைப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் மிருதங்கம் கற்று வருகிறார்.

TNN 28 Mar 2017, 6:27 pm
சென்னை: பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்வம் தாள மயம்' திரைப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் மிருதங்கம் கற்று வருகிறார்.
Samayam Tamil gv prakash learns mirudhangam for his next film
மிருதங்கம் கற்கும் ஜி.வி.பிரகாஷ்


உமையாள்புரம் சிவராமன் எனும் மிருதங்க வித்வானிடம் ஜி.வி.பிரகாஷ் மிருதங்கம் கற்று வருகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

ஏற்கனவே இப்படத்துக்காக 9 பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்துக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'பிரேமம்' நாயகி சாய் பல்லவி ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும்,இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Music composer GV Prakash Kumar is learning to play the mirudhangam. And guess who his guru is. It's none other than the mirudhangam expert Umayalpuram Sivaraman. The composer is brushing up his skills for his upcoming romantic film Sarvam Thaala Mayam directed by cinematographer-turned-director Rajiv Menon.

அடுத்த செய்தி

டிரெண்டிங்