ஆப்நகரம்

ஜி.வி.பிரகாஷ் - ரைசா இணையும் படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது!

நடிகர் ஜி.வி.பிரகாஷு & நடிகை ரைசா வில்சன் இணையும் படத்தின் தலைப்பு நாளை வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 6 Mar 2019, 5:58 pm
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவரும் நடிகர் விஜய்சேதுபதியைப் போன்று தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் பல படங்களுக்கு இசையையும் அமைத்து வருகிறார்.
Samayam Tamil raiza


சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சர்வம் தாளமயம்‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சர்வம் தாளமயம்‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தன் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ், கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்