ஆப்நகரம்

ஜிவியின் “100% காதல்” வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

TNN 25 Dec 2017, 5:16 pm
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Samayam Tamil gv prakashs 100 percent kadhal movie release date announced today
ஜிவியின் “100% காதல்” வெளியாகும் தேதி அறிவிப்பு!


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்களில் ஜிவி பிரகாஷூம் ஒருவர். டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, செம, அடங்காதே, நாச்சியார், குப்பத்து ராஜா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. தொடர்ந்து 4ஜி, ஐங்கரன், 100% காதல், ரெட்ட கொம்பு, சர்வம் தாள மாயம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Happy Christmas 🎄 #100PercentKaadhal pic.twitter.com/6ze5b5MAL9 — Shalini Pandey (@ShaliniPandey_) December 25, 2017 இதில், 100% காதல் படத்தை இயக்குனர் சந்திரமௌலி இயக்கிவருகிறார். ஜிவிக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்பட பலரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து சொல்லும் விதமாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்