ஆப்நகரம்

ஜி.வி. பிரகாஷின் 7 படங்கள் ரிலீஸுக்கு தயார்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 7 படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

Samayam Tamil 16 Mar 2019, 4:42 pm
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராவும், இளம் ஹீரோவாகவும் வலம் வருபவர் நடிகர் ஜி.வி. பிரகாஷ். தற்போது இவர் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சர்வதாளமயம்’. இந்தப் படம் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது.
Samayam Tamil GV-Prakash


தற்போது இவர் நடித்து முடித்துள்ள படங்கள் ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’, ‘வாட்ச்மேன்’, ‘4 ஜி’ ஆகியவை. இதில் ‘குப்பத்து ராஜா’ வரும் ஏப்ரல் 5 ஆம் தேதியும், ‘வாட்ச்மேன்’ ஏப்ரல் 12 ஆம் தேதியும் திரைக்கு வருகிறது.

இந்தாண்டு மட்டும் இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகவுள்ளன. நடிப்புக்கிடையே பல படங்களுக்கு இசையையும் அமைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்