ஆப்நகரம்

மெர்சலை அடுத்து இப்படை வெல்லும் படத்திற்கு புரோமஷன் கொடுக்கும் எச.ராஜா

இப்படை வெல்லம் திரைப்படத்தை பற்றி பாஜக பேசினால் படம் வெற்றி பெறும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், எச். ராஜா உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

TNN 4 Nov 2017, 10:45 pm
இப்படை வெல்லம் திரைப்படத்தை பற்றி பாஜக பேசினால் படம் வெற்றி பெறும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், எச். ராஜா உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil h raja commented on ippadai vellum movie
மெர்சலை அடுத்து இப்படை வெல்லும் படத்திற்கு புரோமஷன் கொடுக்கும் எச.ராஜா


மெர்சல் திரைப்படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு பாஜகவினர், அதிலும் குறிப்பாக எச். ராஜா கண்டனம் தெரிவித்ததையடுத்து, வேண்டுமென்றே மக்கள் எல்லோரும் அப்படத்தை பார்த்து வெற்றி பெறச் செய்தனர்.

இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 8ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படை வெல்லும் திரைப்படம் புரோமஷன் குறித்து உதயநிதி சர்சை கருத்தை கூறினார்.

மெர்சல் படத்துக்கு முழு புரோமஷன் செய்தது பாஜக. அது போல், இப்படை வெல்லும் திரைப்படத்துக்கும் எச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி கூறியிருந்தார்.

இந்நிலையில், எச். ராஜா வழக்கம் போல் தனது டுவிட்டர் பக்கத்தில், உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலம் படம் ஓடாதாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம். https://t.co/MfCED6P6DV— H Raja (@HRajaBJP) November 4, 2017 இதுவே படத்திற்கு புரோமஷன் துவக்க நிலை என்று நெட்டிசன்கள் எச். ராஜாவுக்கு மூக்குடைப்பு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்