’ஹேங்ஓவர்’ பட நகைச்சுவை நடிகர் தற்கொலை- ரசிகர்கள் அதிர்ச்சி
ஹேங்ஓவர் படத்தின் மூலம் புகழ்பெற்ற பிராடி ஸ்டீவன்ஸ் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 48.
Samayam Tamil 24 Feb 2019, 12:50 am
ஹேங்ஓவர் படத்தில் நடித்து உலகப் புகழ் அடைந்த நகைச்சுவை நடிகர் பிராடி ஸ்டீவன்ஸ் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் வெளியாகி உலகளவில் வசூலை குவித்த படம் ‘ஹேங்ஓவர்’. இந்த படம் மூன்று பாகங்களாக தயாரிக்கப்பட்டு வெளியாகி அனைத்தும் வசூலை வாரி குவித்தன.
இப்படத்தின் முதல் பாகத்தில் ஃபோல்ட்ஸ் எனும் கதாபாத்திரத்தில் போலீஸ் ஆபீசராகவும், இரண்டாம் பாகத்தில் கிங்ஸ்லி-யை சேர்ந்தவராகவும் நடித்த பட்டையை கிளப்பிய காமெடி நடிகர் பிராடி ஸ்டீவன்ஸ், லாஸ் ஏஞ்சல்சில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.
ஜிம்மி கிம்மல் லைவ் உள்ளிட்ட பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமான பிராடி ஸ்டீவன்ஸ் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.