ஆப்நகரம்

வைரலாகும் ஹன்சிகாவின் தர்ம குணம்!

TNN 13 Jul 2016, 6:15 am
சென்னையின் தெருவோரம் வசிக்கும் மக்களுக்கு நடிகை ஹன்ஷிகா ஆடைகள் கொடுத்து உதவும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil hansika distributing cloths to poor people
வைரலாகும் ஹன்சிகாவின் தர்ம குணம்!


நடிகைகள் எது செய்தாலும் அந்த விஷயம் காட்டுத்தீ போல பரவும் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வரிசையில் சமீபத்தில், சென்னையின் பிளாட் ஃபாரத்தில் வசிக்கும் மக்கள் சிலருக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி ஆடை மற்றும் துணிகள் கொடுத்து உதவி செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து ரசிகர்கள் சிலர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர்.



இந்த வீடியோ எப்படி வெளியிடப்பட்டது என்று தெரியவில்லை என்று ஹன்சிகா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். திட்டமிட்டு எடுத்துவிட்டு எப்படி வெளியானது என்று தெரியவில்லை என ஹன்சிகா கூறுவதாகவும் சிலர் ரீடுவீட் செய்துள்ளனர்.

Wonder how this came out 🙈🙈 https://t.co/jkCoNOyscU— Hansika (@ihansika) July 11, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்